வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-29 13:39 IST

சென்னை, 

வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு தற்போதைக்கு இல்லை என்று மின் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்றும் அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்