அமைப்பின் பெயரை மாற்றிய ஓ.பன்னீர்செல்வம்; கூட்டணி குறித்து 23-ந் தேதி முக்கிய முடிவு

அறிக்கையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்பதற்கு பதிலாக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகம் என்று கூறப்பட்டுள்ளது.;

Update:2025-12-15 09:31 IST

சென்னை,

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் வருகிற 23-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த அறிவிப்பில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்பதற்கு பதிலாக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகம் என்று கூறப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில், ‘சென்னை வேப்பேரி ரிதர்ட்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 23-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு, அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்’ என்று கூறியுள்ளார்.

கூட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்