குற்றாலத்தில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

நீர்வரத்து சீராக இருப்பதால் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-01 15:09 IST

தென்காசி,

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால், முன்பு சில நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நீர்வரத்து சீராக இருப்பதால் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் குதித்து மகிழ்கின்றனர். மழை குறைந்து நீர்வரத்து சீராக இருப்பதையடுத்து, மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்