அதிமுக ஒன்றுபட வேண்டுமென பிரதமர் மோடி விரும்புகிறார் - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.;

Update:2025-11-07 18:47 IST

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வைகோவின் குற்றச்சாட்டு, அதிமுக விவகாரம் உள்ளிட்டவை செய்தியாளர்களை கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது;

"14 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை வைகோ ஏன் இப்போது கூறுகிறார் என தெரியவில்லை. ஜெயலலிதா என்ன கூற சொன்னாரோ அதையேதான் நான் இன்றுவரை கூறி வருகிறேன். வைகோ என்ன கூறினாலும் அவர் மீதன மரியாதை, அன்பு மாறாது. நான் சொல்லும் பதில் வைகோவின் மனதை புண்படுத்தும் என்பதால் அதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. (2011-ல் அதிமுகவுடனான கூட்டணி விவகாரத்தில் ஜெயலலிதாவிடம் ஓ.பன்னீர்செல்வம் பொய் கூறியதாக வைகோ இன்று குற்றம் சாட்டி இருந்தார்)

Advertising
Advertising

கட்சியை ஒன்றிணைக்கும் நல்ல எண்ணத்தில்தான் செங்கோட்டையன் செயல்பட்டார். ஒருவர், சொந்த விருப்பு, வெறுப்புக்காக கட்சி ஒன்றுபடுவதை தடுக்கிறார். அதிமுக ஒன்றுபட வேண்டுமென 2 கோடி தொண்டர்கள் கண்னீர் விட்டு அழுகின்றனர். பாஜக, நாட்டை ஆளும் இயக்கம். அதிமுக ஒன்றுபட வேண்டுமென பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் நினைக்கிறனர்.

எம்ஜிஆர் உருவாக்கிய விதியை மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. பொதுச்செயலாளர் உள்ளிட்ட எந்த பதவியையும் நான் கேட்கவில்லை. தொண்டர்களிடம் இருந்து மீட்கப்பட்ட உரிமையை மீட்கும் குழுதான் நாங்கள். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்