'செங்கோட்டையன் பின்னணியில் திமுக' - நயினார் நாகேந்திரன் சந்தேகம்

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கூறியதே பாஜகதான் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார்.;

Update:2025-11-07 16:08 IST

திருப்பூர்,

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “என்னை அழைத்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கூறியதே பாஜகதான்.” என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் திருப்பூரில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது.

”செங்கோட்டையன் அளித்த பேட்டியை பார்த்தேன். செங்கோட்டையன் பாஜகவில் யாரை பார்த்தார்? யாரிடம் பேசினார் என்ற தெளிவான அந்த பேட்டியில் தகவல் இல்லை. அப்படி இல்லாத பட்சத்தில் அதுகுறித்து நான் தகவல் தெரிவித்தால் தவறாக மாறிவிடும். செங்கோட்டையன் பின்னணியில் திமுக உள்ளதோ என சந்தேகம் எங்களுக்கும் உள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார் 

Tags:    

மேலும் செய்திகள்