திருநெல்வேலி: கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

இதன் மூலம் அப்பகுதியில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.;

Update:2025-11-07 17:36 IST

சென்னை,

தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 10.11.2025 முதல் 31.03.2026 வரை 142 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து வினாடிக்கு 100 க.அடி அளவுக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட‌ அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள மகிழடி, நம்பித்தலைவன் பட்டயம் ஏர்வாடி, ராஜாக்கள்மங்கலம், வள்ளியூர், தளபதிசமுத்திரம், அச்சம்பாடு, கள்ளிகுளம் ஆகிய பாசன பரப்புகளில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்