மருத்துவக் கட்டமைப்பை மேன்மேலும் மேம்படுத்தும் பிரதமர் மோடி அரசு - நயினார் நாகேந்திரன்

இனி உலகின் மருத்துவத் தலைமையகமாக பாரதம் மாறும் நாள் வெகுதூரமில்லை என தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-24 21:38 IST

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,023 இளங்கலை இடங்களையும் 5,000 முதுகலை இடங்களையும் கூடுதலாக சேர்க்க ஒப்புதல் அளித்துள்ள நமது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் மேம்படுத்தும் மத்திய நிதியுதவித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், இந்தியாவின் ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பும் வலுபெற்று சுகாதாரம் மேம்படுத்தப்படும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இனி உலகின் மருத்துவத் தலைமையகமாக பாரதம் மாறும் நாள் வெகுதூரமில்லை!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்