வடகிழக்கு பருவமழை: புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.;

Update:2025-10-22 16:29 IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து அவ்வப்போது நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 750 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்