பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு ராமதாஸ் பாராட்டு
தேர்வில் தோல்வியடைந்தோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் என ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.;
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
"தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்தின்படியான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92,494 மாணவர்களில் 95.03% மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு நான் சொல்லவிரும்பும் அறிவுரை மனம் தளர்ந்து விடாதீர்கள் என்பது தான். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.