சென்னையில் கூவம் ஆற்றில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம்
போராட்டத்தின் 158-வது நாளான இன்று, கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்;
சென்னை,
சென்னை மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணியை தனியாரிடம் விடக்கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தின் 158-வது நாளான இன்று, கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் கூவம் ஆற்றின் உள்ளே இறங்கிய 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.