கரூரில் அதிர்ச்சி: மினி லாரி - கார் மோதி பயங்கர விபத்து
கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.;
கரூர்,
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் 6 பேர் அரவகுறிச்சி அருகே ஆம்னி காரில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரும், மினி லாரியை ஓட்டி வந்த டிரைவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் காருக்குள் வசமாக சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து இவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து அனைவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.