சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்
சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.;
சென்னை,
பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு ஜோலார்பேட்டை சேலம், ஈரோடு, கோவை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06057) இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 5.12 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் போத்தனூர், பாலக்காடு வழியாக மாலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06058) திருவனந்தபுரத்தில் இருந்து நாளை மறுநாள் இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.32 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி அரக்கோணம் திருவள்ளூர் பெரம்பூர் வழியாக மதியம் 2 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.