சார்லப்பள்ளி-கோட்டயம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சார்லப்பள்ளி-கோட்டயம் இடையே திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.;

Update:2025-11-22 03:30 IST

திருப்பூர்,

சபரிமலை சீசனை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சார்லப்பள்ளியில் (ஐதராபாத்) இருந்து வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 07115) 25-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். கோட்டயத்திலிருந்து 25-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 07116) 27-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு சார்லப்பள்ளியை சென்றடையும்.

Advertising
Advertising

சார்லப்பள்ளியிலிருந்து கோட்டயம் செல்லும்போது 25-ந்தேதி காலை 9.13மணிக்கும், கோட்டயத்திலிருந்து சார்லப்பள்ளி செல்லும் போது 27-ந் ேததி அதிகாலை 3 மணிக்கும் ரெயில்கள் திருப்பூருக்கு வந்து 2 நிமிடம் நின்று செல்லும். மேலும் திருப்பூர் வழியாக கோவை-பனாரஸ் இடையேயும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. டிசம்பர் 3-ந்தேதி மாலை 6 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் ரெயில் (வண்டிஎண் 06005) 3-வது நாள் பனாரஸை சென்றடையும். பனாரஸிலிருந்து டிசம்பர் 9-ந்தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 06006) 4-வது நாள் காலை கோவையை வந்தடையும்.

மேற்கண்ட தகவலை, ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்