கால்நடைகளை விற்பனை செய்ய சிறப்பு இணையதளம் - தமிழக அரசு அறிவிப்பு

கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய இணையதளம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-26 17:39 IST

கோப்புப்படம்

கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய வசதியாக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

விவசாயிகள் நலன் கருதி அவர்களது வருவாய் பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்ய சிறப்பு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும். இந்த இணையதளம் மூலம் கால்நடைகளில் சந்தை விலை நிலவரம் பல்வேறு சந்தைகளில் இருப்பு நிலவரம், உள்ளிட்டவை கால்நடை விவசாயிகளால் அறிந்து கொள்ள இயலும்.

இத்தகவல் மூலம் உரிய விலைக்கு கால்நடைகளை விற்று விவசாயிகளுக்கு பொருளீட்டும் வசதி ஏற்படுத்தப்படும். இப்பணிகளை தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்