ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்

ஏவிஎம் சரவணன் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-04 12:33 IST

சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் துவக்கப்பட்ட நாள் முதல் மூத்த தயாரிப்பாளராகவும், உறுப்பினராகவும் இருந்து வந்த ஏவிஎம் சரவணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி திரைத்துறையில் உள்ள தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் பேரதிர்ச்சியாகும்.

தமிழ் திரை உலகில் விசிகுகநாதன், எஸ்.பி. முத்துராமன், ஏ.சி. திருலோகசந்தர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன், பாரதிராஜா, இராம நாராயணன், விசு, கே.ரங்கராஜ், ஆர்வி உதயகுமார், ஷங்கர் என முன்னணி இயக்குனர்கள் பலரும் ஏவிஎம்-ல் பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மேலும் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி விஜயகாந்த், அஜித், பாக்யராஜ், பாண்டியராஜன் நடிகர்களின் படங்கள் மட்டுமல்ல. சிறுமுதலீட்டில் தயாரித்த சிறப்பான படங்கள் உட்பட 10 படங்களுக்கு மேல் தயாரித்த நிறுவனம் முக்கிய பங்கு வகித்தவர் சரவணன் அவர்கள்

சிறு முதலீட்டில் ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம் படம் தேசிய விருது பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படத் தொழிலை மிக நேர்த்தியாக கையாண்ட நிறுவனம் ஏவிஎம் நிறுவனம். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் கோலோச்சிய நிறுவனம்.

அவரது மறைவு திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும் நிறுவனத்தின் ஏவிஎம் ஊழியர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்