சாம்பல் புதன் வழிபாடுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
சாம்பல் புதனையொட்டி கிறிஸ்துவ தேவாலயங்களில் அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.;
சென்னை,
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.அவர் 3-வது நாளில் உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அதற்கு முந்தைய 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
அந்த வகையில், கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது. சாம்பல் புதனை முன்னிட்டு தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.இதில், ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். கிறிஸ்தவர்கள் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பல் விபூதியிட்டு தவக்காலத்தை தொடங்கிவைத்தனர்.