திருச்செந்தூரில் திடீரென பல அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.;

Update:2025-11-23 15:45 IST

முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கடல் அவ்வப்போது உள்வாங்குவதும் பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் நடந்து வருகிறது.

இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் இன்று திடீரென பல அடி தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. இதனால், கடலுக்குள் இருக்கும் பாசிபடிந்த பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தென்பட்டன. அவற்றை பக்தர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்