மெட்ரோ ரெயில் திட்டத்தை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: அண்ணாமலை

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது என்று அண்ணாமலை கூறினார்.;

Update:2025-11-23 12:12 IST

திருச்சி,

திருச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவை-மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். தமிழகத்திற்கு இரண்டு முறை வந்த பிரதமர் மோடியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே சந்தித்திருக்கலாம். ஏன் சந்திக்கவில்லை?.

கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ வர வேண்டாம் என்ற எண்ணம்தான் முதல்-அமைச்சருக்கு இருக்கிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநில மெட்ரோ ரெயில் திட்டத்திற்கும் வழங்காத நிதியை சென்னை மெட்ரோ-2 திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

Advertising
Advertising

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டி.ஜி.பி. நியமனத்தில் காலம் தாழ்த்தி வருகிறார். யு.பி.எஸ்.சி. பரிந்துரைத்த முதல் 3 இடங்களில் இருப்பவர்கள் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள். அவர்களும் ஓய்வு பெறும் தருவாயில் உள்ளார்கள்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வில் உள்ளவர்கள் 4 மற்றும் 5-வது இடங்களில் இருக்கிறார்கள். அவர்களை நியமனம் செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலம் தாழ்த்தி வருகிறார். டிஜிபி இருந்தால்தானே சிஸ்டம் வேலை செய்யும். டிஜிபி மேலதான் பயம் இருக்கும்.

கடலூர் மாவட்டத்தில் 38 கிராமங்கள் டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அதிக பலம் கொண்டுள்ளது. தி.மு.க.வுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்