தேனி: பழைய கார் உடைக்கும் குடோனில் திடீர் தீ விபத்து
குடோனில் திடீரென நைட்ரஜன் சிலிண்டர் வெடித்து தீ ஏற்பட்டது.;
தேனி,
தேனி மாவட்டம் கம்பத்தில் பழைய கார் உடைக்கும் குடோனில் திடீரென நைட்ரஜன் சிலிண்டர் வெடித்து தீ ஏற்பட்டது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அருகே சென்றபோது அங்கிருந்த நைட்ரஜன் சிலிண்டரில் இருந்த கியாஸ் கசந்து மேலும் தீ அதிகளவு எரியத்தொடங்கியது. இதைப்பார்த்தவர்கள் அங்கிருந்து தலை தெறிக்க ஓடினர்.
பின்னர் விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் எறிந்து சேதமாகின.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.