எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை - டிடிவி தினகரன்

நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-15 15:29 IST

தஞ்சை,

தஞ்சையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

75 ஆண்டுகால மற்றும் 50 ஆண்டு கால கட்சிக்கு இணையாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாகிவிட்டது. வருகின்ற தேர்தலில் நிச்சயம் முத்திரை பதிக்கும். நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை. உறுதியாக கூறுகிறேன். வருகின்ற மே மாதம் இதற்கான அர்த்தம் உங்களுக்கு புரியும்.

எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் அதை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை. அ.தி.மு.க ஒன்றிணைப்புக்கான 10 நாட்கள் கெடு முடிந்தது குறித்து அதற்கான விளக்கத்தை செங்கோட்டையன் அளிப்பார்.எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்வது அது அவரது விஷயம் அவரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்