அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் வரும் 27-ம் தேதி நடத்த உள்ளதாக அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.;

Update:2026-01-24 17:44 IST

2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி டி.டி.பி.எஸ். அனல்மின் நிலைய நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு மின்வாரிய மின் உற்பத்தி மற்றும் விநியோக வட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் பாலா(எ) பாலசந்தர் தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அப்போது அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர், வரும் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்