பெரம்பலூரில் போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - 2 காவலர்கள் காயம்

குற்றவாளிகள் இருவரும் தற்போது போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.;

Update:2026-01-24 16:20 IST

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரவுடி வெள்ளை காளி உள்ளிட்ட 2 குற்றவாளிகளை போலீசார் புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரவுடி வெள்ளை காளி மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பழிக்குப் பழியாக கடந்த 22 ஆண்டுகளில் 21 கொலைகள் நடந்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகிய 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், தாக்குதலில் இருந்து 4 காவலர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். மேலும் குற்றவாளிகள் இருவரும் தற்போது போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்