நிலப்பிரச்சினை: அத்துமீறி நுழைந்து சுற்றுச்சுவர் உடைப்பு- போலீஸ் விசாரணை
நெல்லை குலவணிகர்புரம் பகுதியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான நிலம் தொடர்பான பிரச்சினை குறித்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு நடந்து வருகிறது.;
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை மகாராஜநகர் பகுதியை சேர்ந்த ராஜ் மகன் அந்தோணி காரல்மார்க்ஸ் என்பவருக்கு சொந்தமான நிலம் நெல்லை புதிய பேருந்து நிலையம் பின்பகுதியில் குலவணிகர்புரம் பகுதியில் உள்ளது. இந்த நிலம் தொடர்பான பிரச்சினை குறித்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று காலையில் பாளையங்கோட்டை கரியநயினார் தெருவை சேர்ந்த சவரிமுத்து மகன் மரியஜான் (வயது 66), அவரது மகன் ரமேஷ், மகாராஜநகர் பகுதியைச் சேர்ந்த ராஜ் மகன் அந்தோணிகால்வின், பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சேர்ந்த டேனியல் மற்றும் சிலருடன் சேர்ந்து மேற்சொன்ன நபரின் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சுற்றுச்சுவரை உடைத்ததோடு, அந்த நபரையும் மிரட்டி அங்கிருந்த இரும்புப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.