தூத்துக்குடி: சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்

தூத்துக்குடி ராஜீவ்நகர் சந்திப்பில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து சாலையின் நடுவே நிரந்தரமாக தேங்கி உள்ளது.;

Update:2025-10-29 13:43 IST

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முருகன் தியேட்டர் முதல் பாக்கியநாதன்விளை வரையிலான தாளமுத்துநகர் பிரதான சாலை தற்போது பெய்த கனமழையின் காரணமாக பழுதடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு மிகப்பெரிய தடையை ஏற்படுத்தி வருகிறது. இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த இடத்தை கடந்து செல்ல அச்சத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

இதில் பழைய முருகன் தியேட்டர் முன் ராஜீவ்நகர் சந்திப்பில் மழையின் போது தேங்கிய மழைநீர் வெளியேற வழியின்றி சாலையின் பள்ளத்தாக்கில் தேங்கி கிடந்தது. இது சார்ந்த பிரச்சினையை பொதுமக்கள் சார்பாக மேயரின் கவனத்திற்கு புகாராக தெரிவித்தவுடன் மாநகராட்சி வாகனம் மூலமாக தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தினார்கள். ஆனாலும் அப்புறப்படுத்திய பின்னர் அந்த இடத்தில் பாதாள சாக்கடை கால்வாய் சேனல் வழியாக கழிவு நீர் வெளியேறி அதே இடத்தில் மீண்டும் குளம் போல் அசுத்த தண்ணீர் நிரந்தரமாக தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மழை நீரும், கழிவு நீரும் கலந்து சாலையின் நடுவே நிரந்தரமாக தேங்கி கிடப்பதால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதியும், இந்த சாலையை அதிகமாக பயன்படுத்தி வரும் மாணவ மாணவியர்களின் உடல் நிலையை மனதில் கொண்டும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்