தூத்துக்குடியில் சோகம்; கடலில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
வார இறுதி நாட்கள் மற்றும் குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், சிறுவர்கள் கடலில் குளிக்க சென்றுள்ளனர்.;
தூத்துக்குடி மொட்டை கோபுரம் பகுதியில் கடலில் குளித்து கொண்டிருந்த 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடியில் தாளமுத்து நகர் அருகேயுள்ள கீதாஜீவன் நகர் பகுதியை சேர்ந்த வனராஜ் மகன் திருமணி (வயது 14), (9-ம் வகுப்பு), கதிரேசன் மகன் முகேந்திரன் (12) (7-ம் வகுப்பு) மற்றும் ஆறுமுகம் மகன் நரேன் கார்த்திக் (13), (8-ம் வகுப்பு) ஆகிய 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
வார இறுதி நாட்கள் மற்றும் குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு பள்ளியில் விடுமுறை விடப்பட்ட நிலையில், அவர்கள் 3 பேரும் கடலில் குளித்து பொழுதுபோக்க சென்றுள்ளனர். அப்போது, இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்தவர்களிடையே சோகம் ஏற்பட்டு உள்ளது.