இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-03-15 12:52 IST


Live Updates
2025-03-15 09:14 GMT

பிரதமர் மோடி இலங்கை பயணம்

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கை செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக, பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரியா உள்ளிட்டோரை சந்திக்கிறார். 

2025-03-15 08:10 GMT

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த அன்பிற்குரிய சகோதரர் திரு. சஜி (எ) B.அந்தோணி சேவியர் அவர்கள் காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.

என் மீதும் கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கழகப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்- விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு

Tags:    

மேலும் செய்திகள்