2025-07-02 04:32 GMT
காசா மீதான தாக்குதல் முடிவுக்கு வருமா?.. டிரம்பை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜூலை 7 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் வரவேற்க திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்து, மீதமுள்ள பணயக்கைதிகளை திருப்பி அனுப்புமாறு டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி இருந்தார்.
2025-07-02 04:29 GMT
சிம்மம்
பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தொலைந்து போன பொருள் மீண்டும் வந்தடையும். வேலையில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். சகோதர வழியில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்