இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

Update:2025-07-05 08:57 IST
Live Updates - Page 2
2025-07-05 07:56 GMT

ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு


போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.


2025-07-05 07:28 GMT

புதிய கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் அவருக்கு முழு உருவ சிலை வைக்க காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை வைக்க அனுமதி அளிப்பதாக தமிழ்நாடு அரசு கோர்ட்டில் தெரிவித்தது. இந்த கொலை நடந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது.

இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி நடந்தது. இந்த பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியின் பெயரை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கொடியையும் வெளியிட்டார்.

2025-07-05 06:31 GMT

மதுரை ஆதீனம் காவல் துறை விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை


மதுரை ஆதீனத்திற்கு பதிலாக மடத்தின் செயலாளர் செல்வகுமார் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். மேலும் மதுரை ஆதீனத்துக்கு வயது முதிர்வு காரணமாக காவல் நிலையம் வரமுடியவில்லை எனவும் ஆஜர் ஆக சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


2025-07-05 06:28 GMT

எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்: பிரசார பாடல் வெளியீடு


எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம் தொடர்பான இலச்சினை மற்றும் பாடல் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை கழக அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப் பயணத்திற்கான பாடலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.


2025-07-05 05:56 GMT

த.வெ.க-வின் சிறப்பு ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்காலிக ஓய்வு


தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவதில் இருந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“பீகார் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறேன் நவம்பர் மாதத்திற்குப் பிறகு விஜய்யின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவது குறித்து முடிவெடுப்பேன்” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-07-05 05:49 GMT

சிறுநீரக கோளாறால் உயிருக்குப் போராடும் நடிகர்...ரூ. 50 லட்சம் கொடுத்து உதவிய பிரபாஸ்


தெலுங்கு திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான பிஷ் வெங்கட், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.


2025-07-05 05:47 GMT

மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்


தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



2025-07-05 05:46 GMT

பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு


அர்ஜென்டினாவில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் எஜீஜா சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை சென்றிறங்கியதும் பாரம்பரிய முறைப்படி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


2025-07-05 05:45 GMT

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். 


2025-07-05 05:42 GMT

''அசோகாவில் அஜித்தின் கதாபாத்திரம் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது'' - விஷ்ணு மஞ்சு


தற்போது கண்ணப்பாவில் நடித்ததற்காக கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் மஞ்சு விஷ்ணு, கடந்த 2001-ம் ஆண்டு சந்தோஷ் சிவன் இயக்கிய "அசோகா" திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் தனக்கு ஏமாற்றத்தை கொடுத்ததாக கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்