இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
அமெரிக்காவில் அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் மற்றும் அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் டிரம்ப் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள் நீக்கம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ, எலான் மஸ்க் இடையே கடும் வார்த்தை மோதல் எற்பட்டது. ரூபியோ பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யவில்லை என்று எலான் மஸ்க் கூறினார். இதற்கு ரூபியோ எதிர்ப்பு தெரிவித்து பேசினார். பின்னர் டிரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, ரூபியோ-எலான் மஸ்க் மோதல் இல்லை. அவர்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றார்.
அ.தி.மு.க. அலுவலகத்தில் மகளிர் தினவிழா; எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாட்டம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் கேக் வெட்டி மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. 10ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் செயல்படவேண்டிய விதம் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
மகளிர் தினம்: மதுரை மாநகர பெண் காவலர்களுக்கு ஒரு நாள் அனுமதி விடுப்பு
மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் அனுமதி விடுப்பு வழங்கினார் காவல் ஆணையர் லோகநாதன்.
2026ல் தி.மு.க. அரசை மாற்றுவோம் - த.வெ.க. தலைவர் விஜய்
2026ல் தி.மு.க. அரசை மாற்றுவோம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.