2025-02-18 03:47 GMT
உக்ரைனில் நீண்டகால அமைதி ஏற்படுவதற்காக ஐரோப்பிய தலைவர்கள் பலரை ஒன்றிணைத்து கொண்டு வந்து, உள்ளேன். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் நான் பேசியிருக்கிறேன்.
உக்ரைனில் வலுவான மற்றும் நீண்டகால அமைதி வேண்டும் என கேட்கிறோம். இதனை அடைவதற்கு, காரணமேயின்றி போர் செய்யும் போக்கை ரஷியா நிறுத்த வேண்டும். அதனுடன், உக்ரைன் மக்களுக்கு வலிமையான மற்றும் நம்பத்தக்க பாதுகாப்பு உத்தரவாதங்களும் அளிக்கப்பட வேண்டும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்து உள்ளார்.