இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

Update:2025-08-23 10:04 IST
Live Updates - Page 5
2025-08-23 04:42 GMT

216 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடும் இளம்பெண்


உடுப்பியைச் சேர்ந்த விதுசி தீக்ஷா என்ற இளம்பெண் 216 மணி நேரம் தொடர்ந்து பரத நாட்டியம் ஆடுகிறார். நேற்று முன்தினம் மதியம் 3.30 மணியளவில் அவர் பரதநாட்டியம் ஆட தொடங்கினார். வருகிற 30-ந் தேதி அவர் 216 மணி நேரம் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி முடிப்பார் என்று சொல்லப்படுகிறது.


2025-08-23 04:41 GMT

மும்பையில் சதுர்த்தி விழா: விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு


மும்பையில் வருகிற 27-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்ட உள்ளது. பொது இடங்களில் பந்தல் அமைத்து வழிபடும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் சிற்ப கூடங்களில் இருந்து கொண்டு வரும் பணி தொடங்கி உள்ளது. இந்தநிலையில் பிரசித்தி பெற்ற கிங்சர்க்கிள் ஜி.எஸ்.பி. பந்தல் விநாயகருக்கு ரூ.474 கோடியே 46 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.


2025-08-23 04:39 GMT

அமெரிக்கா: சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கி 5 பேர் பலி; இந்தியர்கள் உள்பட 40 பேர் காயம்


ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. நியூயார்க்கின் பப்பல்லோ நகருக்கு 40 கி.மீ. கிழக்கே பெம்புரோக் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இதனை மாகாண போலீஸ் உயரதிகாரியான மஜ் ஆண்ட்ரே ரே பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உறுதிப்படுத்தி உள்ளார்.


2025-08-23 04:37 GMT

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விபரீதம்


காலையில் வேலைக்கு சென்ற நிலையில், கண்ணகி நகரில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி (30) உயிரிழந்தார். தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் கசிந்திருந்த நிலையில் இந்த விபரீத சம்பவம் நேரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025-08-23 04:35 GMT

இன்றைய ராசிபலன் - 23.08.2025

இன்றைய பஞ்சாங்கம்:-

விசுவாவசு வருடம் ஆவணி 7-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 01.51 வரை ஆயில்யம் பின்பு மகம்

திதி: இன்று பிற்பகல் 12.29 வரை அமாவாசை பின்பு பிரதமை

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 7.45 - 08.45

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 9.00 - 10.30

எமகண்டம் மாலை: 1.30 - 3.00

குளிகை காலை: 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 9.30 - 10.30

Tags:    

மேலும் செய்திகள்