இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
உங்களது தங்கமான இதயத்தையும், நாம் பகிர்ந்த சிறப்பான தருணங்களையும் என்றும் எனது நினைவில் வைத்திருப்பேன் என்று தர்மேந்திரா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவிதுதுள்ளார்.
நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை ஒட்டி வரும் டிசம்பர் 1ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்ய டிச.13ம் தேதி வேலைநாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி இடைக்கால் அருகே நடந்த விபத்தில் உயிர்கள் பறிபோன செய்தியறிந்து வேதனையடைந்தேன் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்
அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு கொலை வழக்கில் 4ஆவதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயில்தார் சிங் என்பவர் விடுதலை செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவாக இருந்த சுதர்சனம் 2005-ல் பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி கடையநல்லூர் பேருந்து விபத்தில் பலர் இறந்த செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல், அனுபாதபங்கள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
துபாய் ஏர் ஷோவில் நடந்த சம்பவம், சில விதிவிலக்கான சூழ்நிலைகளால் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட நிகழ்வே. விபத்து குறித்து விசாரணை அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். இந்த சம்பவத்தால் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள், நிதிநிலை, எதிர்கால விமான விநியோகங்களில் எந்தவித பாதிப்பும் இல்லை என எச்.ஏ.எல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நடிகர் தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது. சினிமாவில் தான் ஏற்ற ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஆழமான நடிப்பை கொடுத்த அற்புதமான நடிகர் நடிகர் தர்மேந்திரா நடித்த வேடங்கள் எண்ணற்ற மக்களின் மனதைத் தொடும் வகையில் இருந்தது; தனது எளிமை, பணிவு, அரவணைப்புக்காக என்றும் அவர் போற்றப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய திரைப்பட உலகம் விலைமதிப்பற்ற நட்சத்திரத்தை இழந்து விட்டது. பத்ம பூஷண் விருது பெற்ற தர்மேந்திரா பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயங்களில் ஆட்சி செய்தவர் தர்மேந்திராவின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் ரீதியாக தனியார் பேருந்துகள் போட்டி போடுகின்றன. தென்காசி பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 66 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
தென்காசியில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் இறந்த செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது. விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.