தனியார் பேருந்து உரிமம் ரத்து
தென்காசி, கடையநல்லூரில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தநிலையில், விபத்துக்குள்ளான 2 பேருந்துகளில் ஒரு பேருந்து நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து தென்காசி மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா முன்னிலை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்தியா ௨௦௧ ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் - 58, வாஷிங்டன் சுந்தர் - 48 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் யான்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் 2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 288 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு கத்தி குத்து
ஈரோட்டில், அரசு மருத்துவமனை வளாகத்தில் ஸ்கேன் எடுக்க காத்திருந்த பெருமாள் என்பவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. கத்தியால் குத்திய நபர் ஏற்கனவே மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய நபர் பேருந்தில் செல்லும்போது மேலும் ஒருவரை வெட்டியுள்ளார். மர்மநபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்மொழி பூங்கா - நாளை திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர்
கோவை சிறைச்சாலை மைதானத்தில் ரூ 214.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை நாளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கிறார். செம்மொழி பூங்கா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா கூறியுள்ளார்.
எஸ்.ஐ.ஆர்.பணிகள்: கூடுதல் அவகாசம் இல்லை -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதில்
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 50 சதவீதம் `எஸ்.ஐ.ஆர்.' படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 2.43 லட்சம் தேர்தல் பணியாளர்கள் `எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
தென்காசி அருகே பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. காலூன்ற முடியாது’ - செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-
“பிகார் தேர்தல் முடிவுகளால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதமான பின்னடைவும் இருக்காது. அது வட இந்தியா, இது தென்னிந்தியா. அது பீகார், இது தமிழ்நாடு. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
பீகாரில் பா.ஜ.க. மற்றும் ஜே.டி.யு. ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்திருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஒருபோதும் பா.ஜ.க. ஆளுங்கட்சியாக இருந்ததில்லை. தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. காலூன்ற முடியாது. அதற்கு வாய்ப்பு கிடையாது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.