இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025

Update:2025-12-24 09:02 IST
Live Updates - Page 2
2025-12-24 06:16 GMT

உன்னாவ் வழக்கில் திருப்பம்

நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம் .

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் இருக்கும் பகுதிக்கு செல்லக்கூடாது, பாதிக்கப்பட்டவரையோ அவரின் தாயையோ அச்சுறுத்த கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமினும் வழங்கியுள்ளது.

2025-12-24 05:59 GMT

தென்காசியில் மட்டும் 300 வீரர்கள்

தென்காசி மாவட்டத்தில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழகத்தையே புருவம் உயர செய்துள்ளது.

2025-12-24 05:57 GMT

புதின் முடிவால் போப் வேதனை

கிறிஸ்துமஸ் நாளில் போர் நிறுத்தம் செய்ய புதின் மறுப்பு தெரிவித்தது, தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாக போப் லியோ வேதனை தெரிவித்துள்ளார். இருப்பினும், இன்னொரு முறை ரஷியாவுக்கு கோரிக்கை வைப்பேன் என்று கூறியுள்ள அவர், கிறிஸ்துமஸ்ஸில் உலகம் முழுவதும் அமைதியாக இருக்க வேண்டும் என்றார்

2025-12-24 05:23 GMT

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். இதையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர்.

2025-12-24 04:55 GMT

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

2025-12-24 04:46 GMT

அதிநவீன குளிர்சாதன பேருந்து சேவை தொடக்கம்

20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். 2×2 சீட்டிங் அமைப்புடன் 51 இருக்கைகள், பெரிய அளவிலான ஜன்னல்கள், சார்ஜிங் வசதி, பாதுகாப்பு அமைப்பு, கேமராக்கள், சென்சார் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2025-12-24 03:49 GMT

கனவுகளை உருவாக்கிச் சென்றவர் எம்ஜிஆர் - எடப்பாடி பழனிசாமி

வறியவர்களின் வேதனையை தன் வேதனையாக கொண்டு அன்பை, அருளை அரசியலாக்கிய மக்கள் திலகம்; ஒரு இயக்கத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கனவுகளையும் உருவாக்கிச் சென்றவர் எம்ஜிஆர் திராவிட இயக்கத்தின் திரைமுகமாய் எளிய மக்களிடம் கொள்கைகளை கொண்டு சேர்த்தப் பேராளுமை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2025-12-24 03:46 GMT

விஜய் ஹசாரேவில் ரோகித், கோலி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஹசாரே தொடரில் ரோகித், கோலி விளையாடவுள்ளனர். மும்பை அணியில் ரோகித் சர்மாவும், டெல்லி அணியில் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளனர்.

2025-12-24 03:43 GMT

நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி நுழையக் கூடாது: வனத் துறை

உதகையில் தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை உள்ள வனப்பகுதிகளில் அத்துமீறி யாரும் நுழையக் கூடாது. வனத்தில் அத்துமீறி நுழைந்து ட்ரோன் பயன்படுத்துவது போன்றவற்றை அனுமதிக்க முடியாது என வனத் துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்