மூணாறு அருகே மலைப்பாதையில் கவிழ்ந்த சுற்றுலா பஸ்

கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி மலைப்பாதையில் கவிழ்ந்தது.;

Update:2025-09-15 00:59 IST

கோழிக்கோடு,

தமிழகத்தில் கோவையில் இருந்து 25 பேருடன் சுற்றுலா பஸ் ஒன்று நேற்று மூணாறு நோக்கி வந்து கொண்டிருந்தது. மூணாறு-உடுமலை சாலையில் தலையார் என்ற பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்ப முயன்றார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி மலைப்பாதையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் வந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் பஸ்சில் சிக்கி இருந்த சுற்றுலா பயணிகளை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்