சேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்தவர்வர்கள் ஆவர்.;
சேலம்,
சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த 20 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.