மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,300 சரிவு

கடந்த வாரம் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000 விற்கப்பட்டது.;

Update:2025-05-27 08:22 IST

ஈரோடு,

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஈரோட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1,300 சரிந்து ரூ.13,700க்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15,000 விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.13,700க்கு விற்பனையாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்