தவெக நிர்வாகிகள் நியமனம்: 2,827 பேருக்கு பொறுப்பு வழங்கிய விஜய்
இதற்கான அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
கரூர் சம்பவத்தை தொடர்ந்து சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. மீண்டும் தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், கட்சி தொடங்கியதில் இருந்து நிரப்படாமல் இருந்து வந்த இளைஞரணி, மகளிரணி மாவட்ட, வட்ட, ஒன்றியங்களுக்கு நிர்வாகிகளை விஜய் அறிவித்துள்ளார்.
இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி என அணிகளுடன், மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட அமைப்பாளர், 10 இணை அமைப்பாளர்கள் என தமிழ்நாடு முழுவதும் 2,827 பதவியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளார்.
புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.