தென்காசியில் ஆட்டோ மீது வேன் மோதி விபத்து: 2 பேர் சாவு

பழைய குற்றாலம் பகுதியில் ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலத்த காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.;

Update:2025-07-31 10:56 IST

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் பகுதியில் ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலத்த காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சார்ந்த யாஸ்மின் (வயது 53) என்பவர் நேற்று காலையில் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஷேக்அலாவுதீன்(60), மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு 2 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்