மாவீரர் அழகுமுத்துக் கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்

விடுதலைப் போராட்டக் களத்தில் தலைவணங்காமல் தடந்தோள்களுடன் தீரமாகப் போரிட்டவர் மாவீரர் அழகுமுத்துக் கோன் என விஜய் தெரிவித்துள்ளார்;

Update:2025-07-11 10:35 IST

சென்னை,

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள்ள எக்ஸ் தள பதிவில்,

வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக் கோன் அவர்கள். தாய் நிலத்தின் உரிமை காக்க. அடிமை விலங்கைத் தகர்த்தெறிய, விடுதலைப் போராட்டக் களத்தில் தலைவணங்காமல் தடந்தோள்களுடன் தீரமாகப் போரிட்டவர்.

வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரர் அழகுமுத்துக் கோன் அவர்களின் பிறந்த நாளில் அவரது தீரத்தையும் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம். என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்