திருவாரூர்: மிக்சியை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு

மிக்சியில் உணவு அரைத்தபோது மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்தார்.;

Update:2025-04-13 17:40 IST

திருவாரூர் அருகே 8 மாத குழந்தைக்கு மிக்சியில் உணவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி தாய் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அழகு திருநாவுக்கரசு. இவரது மனைவி சிந்து பைரவி. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் 8 மாத குழந்தைக்கு உணவு கொடுப்பதற்காக சிந்து பைரவி, சாதத்தை மிக்சியில் போட்டு அரைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சிந்து பைரவி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சிந்து பைரவியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்