தமிழகத்தின் 4 இடங்களில் இன்று சதமடித்த வெயில்

தமிழகத்தின் 4 இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.;

Update:2025-03-07 21:40 IST

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு, பனிக்காலம் தொடங்கியது. பனிக்காலத்தில் அதிகாலை நேரங்களில், சாலைகளில் மூடுபனி தென்பட்டது. பொது மக்களுக்கு இதமான சூழலும் நிலவியது. தற்போது, பனிக்காலம் ஓய்ந்து, வெயில் காலம் தொடங்கி விட்டது.

கோடை காலத்தின் தொடக்கத்திலேயே தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஈரோடு, மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

இதன்படி கரூர் பரமத்தியில் 102.2 டிகிரி, திருப்பத்தூரில் 101.3 டிகிரி, ஈரோட்டில் 100.76 டிகிரி, மதுரை விமான நிலையம் பகுதியில் 100.4 டிகிரி அளவிற்கு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் 3-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்