தமிழகத்தில் 8 நகரங்களில் வெயில் சதம்- கரூரில் 104 டிகிரி பதிவு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.;
சென்னை,
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, கரூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 140 டிகிரி வெப்பம் பதிவானது.
அதன்விவரம் வருமாறு:-
கரூர் பரமத்தி - 104 டிகிரி ( 40 செல்சியஸ்)
வேலூர் - 102.74 டிகிரி ( 39.3 செல்சியஸ்)
ஈரோடு - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)
திருச்சி - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)
மதுரை விமான நிலையம்- 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)
சேலம் - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் - 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)
திருத்தணி - 100 டிகிரி (38 செல்சியஸ்)