தமிழகத்தின் 9 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.;
சென்னை,
தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மேலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அந்த இடங்களின் விவரம் வருமாறு:-
வேலூர் - 105.08 டிகிரி (40.6 செல்சியஸ்)
ஈரோடு - 104 டிகிரி (40 செல்சியஸ்)
திருச்சி - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)
திருத்தணி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் - 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)
கரூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)
மதுரை - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)
தஞ்சாவூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)
நாகப்பட்டினம் - 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்)