ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
இந்த தாழ்வு மண்டலத்தால்,தமிழக மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு வங்காளம்-வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது. மேலும் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக மாலைக்குள் மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.