சென்னைக்கு அருகிலேயே நின்று மிரட்டும் டிட்வா

‘டிட்வா ’ புயல் வலுவிழந்தாலும் அதன் வீரியம் குறையவில்லை.;

Update:2025-12-01 21:41 IST

சென்னை,

வங்கக்கடலில் நிலவிய ‘டிட்வா ’ புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்தது. இருப்பினும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், ஆழ்ந்த காற்றாழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே 50 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடித்து சென்னையை மிரட்டுகிறது. ‘டிட்வா ’ புயல், வலுவிழந்தாலும் அதன் வீரியம் குறையவில்லை. காலையில் இருந்து ஒரு கி.மீ கூட நகராமல் வங்கக்கடலில் சுழன்று கொண்டு தொடர் மழையை கொடுத்து வருகிறது.

சென்னையின் பல பகுதிகளில் அதிகனமழை கொட்டியுள்ளது. (காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை)

எண்ணூர் 19 செ.மீ

பாரிமுனை 16 செ.மீ

மணலி புதுநகர் 16 செ.மீ

பேசின்பாலம் 13 செ.மீ

ஐஸ் ஹவுஸ் 13 செ.மீ

விம்கோ நகர் 13 செ.மீ

வடபழனி 12 செ.மீ

கத்திவாக்கம் 12 செ.மீ

கத்திவாக்கம் 12 செ.மீ

காசிமேடு 12 செ.மீ

Tags:    

மேலும் செய்திகள்