12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.;

Update:2025-12-01 16:33 IST

சென்னை,

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தேனி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகள் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்