சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.;
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது .பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மாங்காடு, போரூர், ஐயப்பந்தாங்கல் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.