சென்னையில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.;

Update:2025-09-23 13:35 IST

சென்னை,

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் மழை பரவலாக பெய்து வந்தது. இதனால் வெப்பம் தணிந்து தமிழகத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு  மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழகத்தில் இன்றம், நாளையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.   

சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் பொதுவாக வானம் மேமமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்