சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

சென்னையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டமான சூழல் நிலவி வந்தது.;

Update:2025-05-17 14:58 IST

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டமான சூழல் நிலவி வந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, அரும்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, மதுரவாயல் உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால், சென்னையில் வெப்பம் சற்று தணிந்துள்ளது.

அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராஜாம்பேட்டை, தாங்கி, வென்குடி, ஊத்துக்காடு, புளியம்பாக்கம், வாரணவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. 

 

Tags:    

மேலும் செய்திகள்